யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ராஜினாமா இல்லை : அன்பு மணி ராமதாஸ்
புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 16:05 IST )
' எய்ம்ஸ் ' மருத்துவமனை இயக்குனர் பதவியில் வேணுகோபாலை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாபதவியை தாம் மத்திய சுகாதாரத் துறை மைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று எய்ம்ஸ் இயக்குனர் பதவியிலிருந்து வேணுகோபாலை மத்திய அரசு நீக்கியது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வேணுகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், எய்ம்ஸ் இயக்குனரின் ஓய்வு வயதை மாற்றியமைக்கும் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி மற்றும் ஹெச்.எஸ்.பேடி ஆகியோர் கொண்ட பெஞ்ச், வேணுகோபாலை உடனடியாக மீண்டும் எய்ம்ஸ் இயக்குனர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து , அன்புமணி தமது சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ' எய்ம்ஸ் ' மருத்துவமனையில் உள்ள வேணுகோபால் ஆதரவாளர்களும், பா.ஜனதா தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இது குறித்து அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது , ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், இது தமக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தோல்வியல்ல என்றும் பதிலளித்தார்.

இது தொடர்பாக அரசுதான் முடிவெடுத்தது.அம்முடிவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என அன்புமணி மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஓவியர் எம்.எஃப்.ஹுசைனுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
கர்நாடகா முதல் கட்ட தேர்தல்: பிரச்சாரம் இன்று ஓய்கிறது
ஜம்முவில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
எய்ம்ஸ் : வேணுகோபாலை மீண்டும் நியமிக்க உத்தரவு
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: லாலு கட்சி மிரட்டல்
சேது திட்டமே வேண்டாம்: சு. சுவாமி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace