|
| கர்நாடகா முதல் கட்ட தேர்தல்: பிரச்சாரம் இன்று ஓய்கிறது |
| பெங்களூரு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 13:32 IST ) | |
கர்நாடகாவில் முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டமாக வரும் 10ம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இரண்டாவது கட்ட தேர்தல் வரும் 16 ம் தேதியும், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 22ம் தேதியும் நடைபெறுகின்றன.
இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கர்நாடகாவில் முகாமிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பா.ஜனதா தலைவர் அத்வானி காடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, நேற்று தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
மாநிலத்தில் தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறும் வகையில் பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|