|
| ஜம்முவில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் |
| ஜம்மு(ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 13:17 IST ) | |
ஜம்முவில் தீவிரவாதிகளின் மறைவிடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் ரியாஸி மாவட்டதில் தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ரஜோரி மாவட்டம் புதால் என்ற கிராமத்தில் உள்ள ஒரு தீவிரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.அதன் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 79 டெட்டேனட்டர்கள், 27 கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
அதேபோன்று கண்டி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தீவிரவாதிகளின் மறைவிடத்தில் 8 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து , ஏ.கே. ரக துப்பாக்கி குண்டுகள் மற்றும் பேட்டரி உள்ளிட்டவி கைப்பற்றப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேற்கூறிய ஆயுதங்களை கைப்பற்றியதன் மூலம் , மாநிலத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்தவிருந்த மிகப்பெரிய அசம்பாவைத சம்பவம் தவிர்க்கப்பட்டுவிட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|