|
| எய்ம்ஸ் : வேணுகோபாலை மீண்டும் நியமிக்க உத்தரவு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 12:26 IST ) | |
இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) இயக்குனர் பொறுப்பில் டாக்டர் வேணுகோபாலை மீண்டும் நியமிக்க, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று எய்ம்ஸ் இயக்குனர் பதவியிலிருந்து வேணுகோபாலை மத்திய அரசு நீக்கியது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வேணுகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், எய்ம்ஸ் இயக்குனரின் ஓய்வு வயதை மாற்றியமைக்கும் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி மற்றும் ஹெச்.எஸ்.பேடி ஆகியோர் கொண்ட பெஞ்ச், வேணுகோபாலை உடனடியாக மீண்டும் எய்ம்ஸ் இயக்குனர் பதவியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
எய்ம்ஸ் இயக்குனர் பதவியில் நியமிக்கப்படுபவர், 5 ஆண்டுகால அளவிலோ அல்லது 65 வயது வரையோ மட்டுமே இப்பதவியில் இருப்பார் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்த மசோதா௦, மக்களவையிலும் மாநிலங்களவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, அம்மசோதா, ஜனாதிபதி பிரதிபா பாட்டீலாலும் கையெழுத்திடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அந்த மசோதாவைக் காரணம் காட்டி வேணுகோபாலின் பதவி பறிக்கப்பட்டது. முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸுக்கும், எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபாலுக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்த நிலையில், 66 வயதான டாக்டர் வேணுகோபாலைக் குறிவைத்து இம்மசோதா நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, எய்ம்ஸ் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|