|
| மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: லாலு கட்சி மிரட்டல் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 11:32 IST ) | |
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயன்றால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று ராஷ்டிரீய ஜனதா தளம் மிரட்டல் விடுத்துள்ளது.
மகளிர் இட ஒதுக்கீட்டில் தாழ்த்தபட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி போன்ற கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதனால், மகளிர் மசோதா தாக்கல் செய்யப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் ராஜ்யசபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும், அமைச்சர் பரத்வாஜ் கையிலிருந்து மசோதாவைப் பறிக்க முலாயம் சிங்கின் சமாஜ்வாடி உள்ளிட்ட சில கட்சிகளின் எம்.பி.க்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பின்னர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக பரத்வாஜ் கூறியிருந்தார். இதற்கு ராஷ்டிரிய ஜனதாதளம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாராளுமன்ற ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் தேவேந்திர பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மகளிர் மசோதா தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த மசோதாவில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யப்படாததற்கு கட்சித் தலைவர் லாலு பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் அதையெல்லாம் மீறி மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் கூட்டணி தர்மத்தை மத்திய அரசு மீறி விட்டது. சட்ட மசோதாக்களை தாக்கல் செய்வதாக இருந்தால் 48 மணி நேரத்திற்கு முன்பு அதன் நகலை எம்.பி. க்களுக்குத் தரவேண்டும் என்பது நடைமுறை. இந்த விஷயத்தில் அதுவும் மீறப்பட்டுள்ளது.
இந்த மசோதாவின்படி, 15 சதவீத பெண்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். அவர்களும் கூட உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த பெண்கள்தான். 85 சதவீத பெண்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. எனவே இந்த மசோதாவை ராஷ்டிரீய ஜனதாதளம் ஏற்கக்கொள்ளாது.
எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், அணுசக்தி ஒப்பந்தத்தை விடவும் மிகப்பெரிய அரசியல் நெருக்கடி மத்திய அரசுக்கு ஏற்படும். இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவும் நாங்கள் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|