|
| சேது திட்டமே வேண்டாம்: சு. சுவாமி |
| புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 11:25 IST ) | |
ராமர் பாலத்தை இடித்துத்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் என்றால் அந்தத் திட்டமே வேண்டாம் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
ராமர் பாலம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து மனு தாக்கல் செய்த சுப்பிரமணியன் சுவாமி,நேற்று தனது சார்பில் தானே நேரில் ஆஜராகி வாதிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:
ராமர் பாலம் தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை நிலையை கடைப்பிடிக்கின்றன. புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதனால் தமிழர்களின் மனம் புண்படும், தமிழ் மக்கள் மிகவும் வேதனைப்படுவார்கள். எனவே அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.
அதேபோலத்தான் ராமர் பாலத்தை இடித்தால் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகள் புண்படும், மனம் வேதனைப்படும். இதை மத்திய அரசும், தமிழக அரசும் உணர வேண்டும். எனவே ராமர் பாலத்தை இடிக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும். விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கையை இந்தியாவில் மேற்கொள்ள ஏதுவாகி விடும் என்று இந்திய கடற்படைத் தளபதியும், கடலோரக் காவல் படை இயக்குநரும் எச்சரித்துள்ளனர்.சேது கால்வாய் அமைந்தால் கொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மிக எளிதாக அவர்களால் செல்ல முடியும்.
ராமர் பாலத்தை இடித்துத்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் சேது சமுத்திரத் திட்டத்தையே மத்திய அரசு கைவிட்டு விட வேண்டும்.
ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலம்தான் என்பதற்குப் போதிய ஆதாரங்கள், சான்றுகள் உள்ளன. இது இயற்கையான மணல் குன்றுகளால் உருவான அமைப்பு என்று மத்திய அரசு கூறுவது தவறு.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இன்றும் விவாதம் தொடரவுள்ள நிலையில், மத்திய அரசு தரப்பிலான கருத்தை எடுத்துரைத்து மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிட உள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|