யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி இல்லை: சோனியா
தும்கூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 08:56 IST )
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைக்கமாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதையொட்டி, முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தும்கூரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது:

கர்நாடகாவில் கடந்த 20 மாதங்களாக நடந்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் ஊழல் தான் அதிகளவில் நடந்துள்ளது. மக்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைக்க மாட்டோம். பொறுப்பான, அமைதியான ஆட்சியை மக்களுக்கு வழங்குவோம்.

தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில் மென்மையான போக்கை கையாளுவதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டியிருப்பது தவறானது.

தீவிரவாதத்தை வேரோடு அழிப்பது தான் மத்திய அரசின் கொள்கை. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளினால் தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார்கள் என்பதை நாடறியும்.

ஆனால் பாரதிய ஜனதா ஆட்சியின்போதுதான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகளவில் நடந்தது. கந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்தின்போது, அவர்களுக்கு பயந்து சிறையிலிருந்த தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டது, பாராளுமன்ற தாக்குதல், குஜராத் அக்ஷர்தாம் கோயில் மீதான தாக்குதல்கள் ஆகியவை பாரதிய ஜனதா ஆட்சியிலேயே நடந்தது. எங்களது நாட்டுப்பற்று பற்றி பாரதிய ஜனதா சான்றிதழ் தர தேவையில்லை.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனவே விரைவில் விலைவாசி குறையும்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கனவை, நனவாக்கும் வகையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அரசியல் ஆதாயத்திற்காகவே மகளிர் மசோதா தாக்கல் : சிவசேனா
புதுச்சேரி சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது
'கர்நாடகா பா.ஜ.அமைச்சரவையில் இஸ்லாமியருக்கு இடம்'
ராஜ் தாக்கரே மீது நடவடிக்கை : மகா.அரசு ஆலோசனை
ராமர் பாலம்: நீதிபதிகளின் கேள்விக்கு வழக்கறிஞர்கள் திணறல்
விலைவாசி பற்றிய நூல்கள்: எம்.பி.க்கள் ஆர்வம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace