|
| மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் : கட்சிகள் கருத்து |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 17:14 IST ) | |
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள் உள்ளிட பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இது குறித்து கூறுகையில் " மற்ற கட்சிகளெல்லாம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து பேசின.ஆனால் நாங்கள் உண்மையிலேயே அம்மசோதாவை தாக்கல் செய்து விட்டோம்.
அமைச்சரவையில் ஒப்புதல் அளித்து மாநிலங்களவையில் மகளிர் மசோதாவை தாக்கல் செய்தோம்.இம்மசோதா நிச்சயம் காலாவதியாகி விடாது " என்றார்.
பா.ஜனதா தலைவர் சுஸ்மா ஸ்வராஜ் கூறுகையில், மகளிர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.அதுவும் ராஜ்ய சபையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இது காலாவதியாகி விடாது.இம்மசோதா குறித்த சில கட்சிகளின் மனப்பான்மையில் துளி கூட மாற்றம் இல்லாதது துரதிருஷ்டவசமானது.
அதே சமயம் இம்மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்னதாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை அரசு கூட்டி, ஒருமித்த கருத்தை ஏற்படுத்தியிருந்தால் , மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது ஏற்பட்ட அமளி நிகழ்ந்திருக்காது " என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிருந்தா காரத் கூறுகையில், இம்மசோதாவை தாக்கல் செய்ததற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை தாம் பாராட்டுவதாகவும், மசோதாவை அறுமுகப்படுத்தியதில் காட்டிய வேகத்தை அதனை நிறைவேற்றுவதிலும் அரசு காட்டும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதே சமயம் சமாஜ்வாடி எம்.பி. அபு ஆஸ்மி, மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்காதவரை இம்மசோதாவை தமது கட்சி எதிர்க்கும் என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|