யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பீகார் மக்களுக்கு பாதுகாப்பு: தேஷ்முக்கிடம் நிதிஷ் கோரிக்கை
பாட்னா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008   ( 16:34 IST )
மும்பையில் வசிக்கும் பீகார் மற்றும் வடமாநில மக்களை பாதுகாக்கும்படி, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

'மண்ணில் மைந்தர்கள்' கோஷத்தை கையில் எடுத்துள்ள மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே, அங்கு வசிக்கும் வட மாநில மக்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இதன் எதிரொலியாக இரு மாதங்களுக்கு முன்பு நடந்த வன்முறையில் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநில மக்களை ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். இதனால், பல்லாயிரக்கணக்கான வடமாநில மக்கள், மும்பையை காலி செய்துவிட்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வடமாநில மக்களுக்கு எதிராக மீண்டும் கருத்து தெரிவித்த ராஜ் தாக்கரே, குறிப்பாக பீகாரிகளை அடித்து விரட்டும்படி கடுமையாக கூறியிருந்தார். இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் வசிக்கும் பீகார் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, மகாராஷ்டிராவில் வசிக்கும் பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தவர் மற்றும் இந்தி மொழி பேசும் பிற மாநில மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும்படியும் கோரிக்கை விடுத்தார். பீகார் மக்களை தொடர்ந்து தாக்கிவரும் ராஜ்தாக்கரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இதைதொடர்ந்து, பீகார் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பும் வழங்கப்படும் என்று விலாஸ்ராவ் தேஷ்முக் உறுதியளித்ததாக நிதிஷ்குமார் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது
காங். கட்சியிலிருந்து ராஜ்ய சபை எம்.பி. அகிலேஷ் தாஸ் விலகல்
கர்நாடகா தேர்தல்: பாதுகாப்புப் படையினர் பெங்களூர் வருகை
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ராஜ்ய சபையில் தாக்கலானது
பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி
மகளிர் மசோதா: ராஜ்யசபையில் இன்று தாக்கல்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace