யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்தது
புதுடெல்லி(ஏஜென்சி), 6 மே 2008   ( 16:15 IST )
மாநிலங்களவை இன்று மறு தேதி குறிப்பிடப்படாமல் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று காலை சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பின்வாசல் வழியாக அரசு தாக்கல் செய்வதாக கூறி சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கட்சி உறுப்பினர்கள், மசோதாவை தாக்கல் செய்ய விடாமல் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பெண் உறுப்பினர்கள் சுற்றிச் சூழ பாதுகாப்புக்கு நின்ற நிலையில், சட்டத் துறை அமைச்சர் பரத்வாஜ் , மகளிருக்கு நாடாளுமன்றத்திலும் , சட்டசபைகளிலும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில், மதியம் 2 மணிக்கு அவை கூடிய சிறிது நேரத்தில் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவை நேற்றே மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையும் இன்று அதேபோன்று ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காங். கட்சியிலிருந்து ராஜ்ய சபை எம்.பி. அகிலேஷ் தாஸ் விலகல்
கர்நாடகா தேர்தல்: பாதுகாப்புப் படையினர் பெங்களூர் வருகை
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ராஜ்ய சபையில் தாக்கலானது
பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி
மகளிர் மசோதா: ராஜ்யசபையில் இன்று தாக்கல்!
அணுசக்தி: இன்று ஐமுகூ- இடதுசாரிகள் குழு கூட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace