|
| காங். கட்சியிலிருந்து ராஜ்ய சபை எம்.பி. அகிலேஷ் தாஸ் விலகல் |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 13:40 IST ) | |
காங்கிரஸ் கட்சியிலிருந்தும், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் அக்கட்சியின் மூத்தத் தலைவர் அகிலேஷ் தாஸ் திடீரென ராஜினாமா செய்தார்.
உத்தரபிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், அண்மையில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவருமான இவர், தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாநிலங்களவை சபாநாயகர் ஹமீத் அன்சாரியிடம் அளித்தார்.
அப்போது, காங்கிரஸ் கட்சி மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி, அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார்.
இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், தாம் ஏற்கெனவே ராஜினாமாக கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவிட்டதாக தெரிவித்தார்.
அகிலேஷ் தனது ராஜினாமா முடிவுக்கான காரணம் குறித்து கூறுகையில், இளவரசர் ராகுல் காந்தியைச் சுற்றி ஒரு கோஷ்டியே இருக்கிறது என்றும், அந்தக் கோஷ்டிக்கு அதிருப்தியளிக்கும் நபரின் நிலை பாதிக்கப்படும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் பனார்சி தாஸின் மகனான இவர், கடந்த மாதம் நடந்த அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பாக, மத்திய எஃகுத்துறை இணையமைச்சராக இருந்தார் என்பதும், அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் விரைவில் முடிவடையவிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|