யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ராஜ்ய சபையில் தாக்கலானது
புதுடெல்லி(ஏஜென்சி), 6 மே 2008   ( 13:10 IST )
சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கலானது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை நேற்றிரவு ஒப்புதல் அளித்திருந்தது.

அதன்படி மாநிலங்களவையில் இன்று இம்மசோதாவை தாக்கல் செய்ய சட்டத் துறை அமைச்சர் பரத்வாஜ் எழுந்ததும் , இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , வட இந்தியர்களுக்கு எதிராக மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமளியில் ஈடுபட்டனர்.

அத்துடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் நகலை அவர்கள் பரத்வாஜிடமிருந்து பறிக்க முயன்றனர்.சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் அபு ஆஸ்மி மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள், பரத்வாஜிடமிருந்து மகளிர் மசோதாவின் நகலை பறிக்க முயன்றனர்.

ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தலையிட்டு , குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்த்துறை அமைச்சரே ரேணுகா சவுத்ரி அபு ஆஸ்மியை தள்ளிவிட்டு , மசோதாக்வின் நகலை பறிக்கும் அபு ஆஸ்மியின் முயற்சியை முறியடித்தார்.

இதுபோன்ற குழப்பம் வரும் என எதிர்பார்த்தோ என்னவோ , அமைச்சர் பரத்வாஜ் இன்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமரும் வரிசயின் நடுப்பகுதியில் அமர்ந்திருந்தார்.அவரைச் சுற்றி குமாரி ஷெலேஜா மற்றும் அம்பிகா சோனி ஆகிய அமைச்சர்களும் , ஜெயந்திநடராஜன் உள்ளிட்ட பெண் எம்.பி.க்களும் அமர்ந்திருந்தனர்.

இதனால் சமாஜ்வாடி உறுப்பினர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டு அமைச்சர் பரத்வாஜ், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த அமளி நடைபெற்றபோது அவையில் பிரதமர் மன்மோகன் சிங், எதிர்கட்சித் தலைவர் ஜஸ்வந்த சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.

முன்னதாக இன்று காலை கேள்வி நேரம் துவங்கியதும் , பிரபல தபேலா கலைஞர் கிஷ்ன் மகாராஜ் மற்றும் மியான்மர் புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து அவை நடவடிக்கைகள் துவங்கியதுமே,சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் எழுந்து வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடும் ராஜ் தாக்கரேவை கைது செய்யக் கோரி அமளியில் ஈடுபட்டனர். அவர்களை இருக்கையில் அமருமாறு அவைத் தலைவர் ஹமித் அன்சாரி எவ்வளவோ கேட்டுக் கொண்டும் பலனில்லாமல் போனதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காங். கட்சியிலிருந்து ராஜ்ய சபை எம்.பி. அகிலேஷ் தாஸ் விலகல்
கர்நாடகா தேர்தல்: பாதுகாப்புப் படையினர் பெங்களூர் வருகை
பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி
மகளிர் மசோதா: ராஜ்யசபையில் இன்று தாக்கல்!
அணுசக்தி: இன்று ஐமுகூ- இடதுசாரிகள் குழு கூட்டம்
‌பிர‌ச்சனைகளை பேசி தீர்க்க தயா‌ர்: ‌பிரதம‌ர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace