யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி
புதுடெல்லி(ஏஜென்சி), 6 மே 2008   ( 12:42 IST )
டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற விழாவில் த்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்கினார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு வழங்கும் பத்மவிருதுகளில் இந்த ஆண்டு 13 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 35 பேருக்கு பத்மபூஷண் விருதும், 71 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளது.

இந்த விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று இரவு நடைபெற்றது.மொத்தம் 56 பேர் இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.

முதலில் பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லேவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து நாராயணமூர்த்தி, சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஓபராய் ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

பின்னர் எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் உள்ளிட்ட 14 பேர் பத்மபூஷண் விருதைப் பெற்றனர்.

தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் உள்ளிட்ட 36 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மகளிர் மசோதா: ராஜ்யசபையில் இன்று தாக்கல்!
அணுசக்தி: இன்று ஐமுகூ- இடதுசாரிகள் குழு கூட்டம்
‌பிர‌ச்சனைகளை பேசி தீர்க்க தயா‌ர்: ‌பிரதம‌ர்
மும்பையில் அமைகிறது பாக். தூதரகம்!
மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
அமளி எம்.பி.க்கள் : சபாநாயகர் நடவடிக்கை வாபஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace