|
| மகளிர் மசோதா: ராஜ்யசபையில் இன்று தாக்கல்! |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 10:32 IST ) | |
பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா ராஜ்யசபையில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மகளிர் மசோதா உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக இந்த மசோதா தாக்கல் செய்யப்படாமலேயே உள்ளது.
முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் ஆட்சியின்போதும், பாரதிய ஜனதா தலைமையிலான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போதும் இந்த மசோதாவை தாக்கல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், மசோதாவை எதிர்த்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் தாக்கல் செய்யமுடியவில்லை.
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள், மகளிர் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு உள் ஒதுக்கீடு அளிக்கக் கோரி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் நடப்புக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்கு நாட்களுக்கு முன்னதாகவே லோக்சபை நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
இதனால், மகளிர் மசோதாவை ராஜ்யசபையில் தாக்கல் செய்வதற்காக மத்திய அமைச்சரவை நேற்றிரவு ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, ராஜ்யசபையில் மகளிர் மசோதா இன்று தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|