|
| அணுசக்தி: இன்று ஐமுகூ- இடதுசாரிகள் குழு கூட்டம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 09:08 IST ) | |
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இதுதொடர்பான ஒருமித்த கருத்து ஏற்படும் வகையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இடதுசாரி தலைவர்களும் அடங்கிய 15 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு பலமுறை கூடி விவாதித்தது. இந்த விவாதத்தின்போது தரப்பட்ட ஒப்புதலைத் தொடர்ந்து, 3 மாதங்களாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இதற்கிடையே, கடந்த மார்ச் 17ம் தேதி நடந்த கூட்டத்தில், இப்பிரச்சனைகளில் தங்கள் தரப்பு நிலைப்பாடுகளை அரசும், இடதுசாரிகளும் பரிமாறிக்கொண்டன. எனினும் அவை தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் உயர்மட்டக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் இந்தியா மேற்கொண்ட பேச்சு வார்த்தை குறித்து அரசு தரப்பில் இடதுசாரி தலைவர்களிடம் விளக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் இடதுசாரிகள் தங்களது அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பர் என்றும் தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|