யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மும்பையில் அமைகிறது பாக். தூதரகம்!
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008   ( 16:39 IST )
மும்பையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தான் தூதரகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தூதரகம், தூதரக அதிகாரிகள் குறித்த இந்தியாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1992ல் மூடப்பட்டது. அதன் பிறகு, சுமார் 16 ஆண்டு காலமாக பாகிஸ்தான் தூதரகம் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுகு முன்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உயர்மட்ட அளவிலான அமைதி பேச்சுவார்த்தை மற்றும் நன்னடத்தை நடவடிக்கைகள் தொடங்கின.

இதில், முக்கிய அம்சமாக இரு நாட்டு தூதரங்களும் பரஸ்பரம் அடுத்த நாட்டில் அமைக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 3 ஆண்டு காலமாக மும்பையில் பாகிஸ்தான் தூதரகம் அமைக்க இடம் தேடும் வேட்டை நடைபெற்று வந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் எந்த இடமும் உறுதிச் செய்யப்படாமலேயே இருந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் ஆலோசனையின் பேரில், மும்பை விமான நிலையம் அருகே கலீனா பகுதியில் உள்ள மகாராஷ்டிரா மாநில வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு உட்பட்ட ஒரு இடத்தை மாநில அரசு தற்போது ஒதுக்கியுள்ளது.

சுமார் 4 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தை சமீபத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் பார்வையிட்டு இறுதி செய்தனர்.

அதன் பிறகு வழக்கமான் சட்ட விதிமுறைகள் முடிந்து, இந்த இடத்தில் தூதரகம் அமைவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, கராச்சியில் விரைவில் இந்திய தூதரகம் அமைக்கப்படவுள்ளது.

மும்பையில் அமையவுள்ள இந்த பாகிஸ்தானின் துணை ஹை கமிஷன் அலுவலகம், தங்களது உறவினர்களை சந்திப்பதற்காக இரு நாடுகளுக்கு இடையே அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
அமளி எம்.பி.க்கள் : சபாநாயகர் நடவடிக்கை வாபஸ்
நந்திகிராமில் மீண்டும் கலவரம்: 2 பேர் காயம்
அசாம் சாலை விபத்து: திருமணக் கோஷ்டியினர் 10 பேர் பலி
தேஷ்பாண்டே மறைவு : மாநிலங்களவை ஒத்திவைப்பு
சபாநாயகர் கோபம் : மக்களவை ஒத்தி வைப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace