|
| மக்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008 ( 16:20 IST ) | |
இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 15 ம் தேதியன்று தொடங்கியது.
கூட்டத் தொடர் துவங்கிய சில நாட்களுக்கு விலைவாசி உயர்வு பிரச்சனை அவையில் பெரும் அமளியை ஏற்படுத்திய நிலையில், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு அதிகார துஷ்பிரயோகம் செய்து , தனது குடும்ப நிறுவனத்திற்கு எரி வாயு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்தது.
இது தொடர்பான பிரச்சனையால் அவை பல முறை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இக்கூட்டத் தொடரின் முக்கிய நிகழ்வாக அவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு உரிமைக் குழுவுக்கு பரிந்துரைத்தார் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.ஜ. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இன்று மக்களவையில் வாயில் விரலலை வைத்து மவுன போராட்டம் நடத்தினர்.
இதனால் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.பின்னர் அவை மீண்டும் கூடியதும் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், எதிர்க்ட்சித் தலைவர் அத்வானியும் அவை நடவடிக்கைகள் எவ்வித இடையூறுமின்றி சுமூகமாக இயங்க தாங்கள் உறுதியளிப்பதாக தெரிவித்தனர்.
அவர்களது இந்த உறுதிமொழியையடுத்து 32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த உரிமை குழுவுக்கு அனுப்பிய பரிந்துரையை திரும்ப பெறுவதாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
இதனையடுத்து அவை, மறுதேதி குறிப்பிடப்படாமல் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|