|
| நந்திகிராமில் மீண்டும் கலவரம்: 2 பேர் காயம் |
| கோல்கத்தா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008 ( 13:17 IST ) | |
நந்திகிராமின் இன்று நடந்த வன்முறையில் 2 பேர் காயமடைந்தனர்.
மேற்கு வங்கத்தில் டாடா கார் தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்கள் அரசு கையகப்படுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, கடந்த ஆண்டு நடந்த வன்முறையில் பலர் பலியாகினர். கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாயிகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும், விவசாய நிலங்களை மீட்க போராடி வரும் பி.யு.பு.சி. அமைப்பினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
இநிநிலையில் இருதரப்பினருக்கும் இடையே நேற்றிரவு மீண்டும் மோதல் வெடித்தது. இன்று அதிகாலையிலும் சண்டை நடந்தது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.துப்பாக்கி சூடும் நடந்தது. வெடிகுண்டுகளும் வீசப்பட்டன.
இதில் நில மீட்புக்குழுவை சேர்ந்த 2 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
இந்த வன்முறை காரணமாக அப்பகுதியை சேர்ந்த சுமார் 500 பேர் நந்திகிராமில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|