யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சபாநாயகர் கோபம் : மக்களவை ஒத்தி வைப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), 5 மே 2008   ( 12:26 IST )
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்களின் மவுனப் போராட்டத்தால் கோபமுற்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி , மக்களவையை இன்று மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு உரிமை குழுவுக்கு சபாநாயகர் சோம்நாத் புதன்கிழமை பரிந்துரை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக , மக்களவை இன்று காலை கூடியதும் அவைக்கு வந்த பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வாயில் விரலை வைத்தபடியே, சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் நடவடிகைக்கு மவுன போராட்டம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று மக்களவை துவங்கியதும் கடந்த 1 ம் தேதியன்று காலமான மாநிலங்களவை உறுப்பினர் தேஷ்பாண்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கேள்வி நேரம் துவங்கியதும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ராம்ஜிலால் எழுந்து, மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மீண்டும் வட இந்தியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது குறித்த பிரச்சனையை எழுப்ப முயன்றார்.அதே சமயம் தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர் எர்ரன் நாயுடு எழுந்து மற்றொரு பிரச்சனையை எழுப்ப முயன்றார்.

ஆனால் எந்த பிரச்சனையும் குறித்த பேச அனுமதிக்காத சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்களின் மவுனப் போராட்டத்தால் கோபமுற்றதாலேயே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நந்திகிராமில் மீண்டும் கலவரம்: 2 பேர் காயம்
அசாம் சாலை விபத்து: திருமணக் கோஷ்டியினர் 10 பேர் பலி
தேஷ்பாண்டே மறைவு : மாநிலங்களவை ஒத்திவைப்பு
லோக்சபையில் தே.ஜ. கூட்டணி மவுன போர்
சபாநாயகர் நடவடிக்கை குறித்து தே.ஜ.கூ இன்று ஆலோசனை
'கிரிமீலேயர்' : லோக்சபையில் இன்று விவாதம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace