|
| லோக்சபையில் தே.ஜ. கூட்டணி மவுன போர் |
| புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008 ( 11:49 IST ) | |
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் நடவடிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்களவையில் தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் இன்று வாயில் விரலை வைத்து மவுன போராட்டம் மேற்கொண்டனர்.
விலை உயர்வு பிரச்சனை தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரி மக்களவையில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அன்றைய தினம் மக்களவையில் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அவை நிகழ்ச்சிகள் எதையும் நடத்த முடியவில்லை.
இவ்வாறு அவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு உரிமை குழுவுக்கு சபாநாயகர் சோம்நாத் புதன்கிழமை பரிந்துரை செய்துள்ளார்.
இந்த எம்.பி.க்களில் பெரும்பாலானோர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , மக்களவை இன்று காலை கூடியதும் அவைக்கு வந்த பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வாயில் விரலை வைத்தபடியே, சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் நடவடிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மவுன போராட்டம் மேற்கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|