|
| சபாநாயகர் நடவடிக்கை குறித்து தே.ஜ.கூ இன்று ஆலோசனை |
| புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008 ( 11:27 IST ) | |
மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உரிமை குழுவுக்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பரிந்துரை செய்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்வது குறித்து ஆலோசிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி இன்று கூடி விவாதிக்க உள்ளது.
விலை உயர்வு பிரச்சனை தொடர்பாக அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரி மக்களவையில் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அன்றைய தினம் மக்களவையில் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அவை நிகழ்ச்சிகள் எதையும் நடத்த முடியவில்லை.
இவ்வாறு அவையில் அமளியில் ஈடுபட்ட 32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு உரிமை குழுவுக்கு சபாநாயகர் சோம்நாத் புதன்கிழமை பரிந்துரை செய்துள்ளார்.
இந்த எம்.பி.க்களில் பெரும்பாலானோர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்தவர்கள். பாஜக உறுப்பினர்கள் ஷாநவாஸ் ஹுசைன், பி.எஸ். காந்தவி, கிஷன் சிங் சங்வான், கிரின் மகேஸ்வரி கூட்டணிக் கட்சிகளான சிவசேனை, சிரோன்மணி அகாலிதளம், பிஜு ஜனதாதளம் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி உறுப்பினர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சபாநாயகரின் இந்த நடவடிக்கை குறித்தும், இது தொடர்பாக அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|