|
| 'கிரிமீலேயர்' : லோக்சபையில் இன்று விவாதம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), 5 மே 2008 ( 09:05 IST ) | |
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து லோக்சபையில் இன்று விவாதம் நடைபெறுகிறது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் வழங்க வகை செய்யும் சட்டம் செல்லும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.
எனினும், 'கிரிமீலேயர்' பிரிவினருக்கு இடஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கிரீமிலேயர் பிரிவினரும் இட ஒதுக்கீட்டில் பயன் பெறும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து லோக்சபையில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. இதனால், வழக்கத்தைவிட இன்றைய லோக்சபை நடவடிக்கைகள் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|