|
| அதிநவீன ஆளில்லா விமான சோதனை வெற்றி |
| புவனேஸ்வர் (ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008 ( 18:54 IST ) | |
அதிநவீன என்ஜினுடன் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா தாக்குதல் விமானம் லக்ஷயா, இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
ஒரிசா மாநிலம் பாலசோர் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திப்பூரில் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், இன்று மதியம் 12 மணியளவில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
அதிநவீன கட்டுப்பாட்டுக் கருவிகளுடன் கூடிய இந்த விமானத்தின் என்ஜினின் தாங்கும் திறன்,அதிகரிக்கப்பட்ட பறக்கும் திறன் ஆகியவை சோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக ஆறு அடி நீளமுள்ள ஒரு மைக்ரோ லைட் விமானத்தின் பறக்கும் திறன் 30 முதல் 35 நிமிடங்கள் வரை இருக்கும். தற்போது பொருத்தப்பட்டுள்ள அதிநவீன என்ஜினின் மூலம் இத்திறன் மேலும் அதிகரிக்கும்.
பெங்களூருவில் உள்ள இந்திய வான்வெளி மேம்பாட்டுக் கட்டமைப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆளில்லா லக்ஷயா விமானம் கடந்த 2000 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|