|
| ராமர் பாலம் : விசாரணை நாளை ஒத்திவைப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008 ( 13:48 IST ) | |
இன்று நடைபெறுவதாக இருந்த ராமர் பாலம் தொடர்பான வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராமர் பாலம் தொடர்பான வழக்கை நாளை மறுதினம் 30ம் தேதியன்று முதல் வழக்காக விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்றும், அதனை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும், மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனிடையே ராமர் பாலம் உள்ள பகுதியில், சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மத்திய அரசும் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்தத் தடையை நீக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், " ராமர் பாலம் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்பதே மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் கருத்தாகும். ராமர் பாலம் எனக் கூறப்படும் ஆதாம் பாலம் இயற்கையாக உருவான அமைப்பாகும். எனவே திட்டத்தை நிறைவேற்ற இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் " என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,இவ்வழக்கை அவசரம் கருதி முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் உச்சநீதிமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை இன்று பரிசீலித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், எம்.கே.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நேற்று முதல் வழக்காக இது விசாரிக்கப்படும் என அறிவித்திருந்தது.
ஆனால் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அரசு வழக்கறிஞர் நரிமன் , இவ்வழக்கு விசாரணையை நாளை ( இன்று ) ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.அந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றமும், வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் ,ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி, இவ்வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படுவதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாகவும், நாளைதான் ( மே 1 ) இவ்வழக்கு விசாரணை பட்டியலில் இருப்பதாக தாங்கள் கருதிவிட்டதாகவும், எனவே இன்று ஒரு நாள் அவகாசம் அளித்து நாளை இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதனையேற்ற நீதிபதிகள் இவ்வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|