|
| 'கிரிமினல் பின்னணி நபர்கள் தேர்தல் ஏஜெண்டுகளாக இருக்கக் கூடாது' |
| புதுடெல்லி(ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008 ( 13:18 IST ) | |
கிரிமினல் பின்னணி உடையவர்கள் தேர்தல் ஏஜெண்டுகளாக இருக்கக் கூடாது என தேர்தல் கமிஷன் கண்டிப்புடன் கூறியுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வருகிற மே 10, 16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கோபாலாசாமி உள்ளிட்ட தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மூன்று பேரும் , கர்நாடக அரசியல் கட்சித் தலைவர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ம்ற்றும்ம் போலீஸ் உயரதிகாரிகள் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில், கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள கிரிமினல் பின்னணி உடையவர்கள் தேர்தல் ஏஜெண்டுகளாக நியமைக்கப்படக் கூடாது என கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.
இதனை கடுமையாக பின்பற்றுமாறும், இந்த விதிமுறைகளை யார் மீறினாலும் அது குறித்து உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், பார்வையாளர்கள் மற்றும் இதர தேர்தல் தொடர்பான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் அந்த கடிதத்தில் தேர்தல் கமிஷன் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|