|
| பணவீக்கத்தை குறைக்க ரூ.1,500 கோடிக்கு வரிச்சலுகை அறிவிப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), 30 ஏப்ரல் 2008 ( 09:31 IST ) | |
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இரும்பு, பால் பவுடர் உள்ளிட்டவற்றின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று நிதி மசோதாவின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்த முக்கிய சலுகைகளாவன:
மென் இரும்பு, இன்கோட்ஸ், முற்றுப்பெறாத எச்.ஆர். மற்றும் சி.ஆர். காயில்கள், பார்கள் மற்றும் ராடுகள் ஆகியவற்றின் மீதான அடிப்படை இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது.
முறுக்கு கம்பிகள் மற்றும் கட்டிட வேலைகளுக்கான கம்பிகள் மீது தற்போதுள்ள 14 சதவிகித இறக்குமதி எதிர் தீர்வை முற்றிலுமாக நீக்கப்படுகிறது.
உருக்கு தயாரிப்பிற்கான மெட்டலுர்ஜிகல் கோக், பெர்ரோ அலாய்ஸ் மற்றும் ஜிங்க் ஆகிய மூன்று முக்கியமான பொருட்களுக்கு தற்போதுள்ள 5 சதவிகித அடிப்படை இறக்குமதி வரி நீக்கப்படுகிறது.
கொழுப்பு நீக்கிய பால் பவுடருக்கான இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகவும், வெண்ணை, எண்ணை மீதான இறக்குமதி வரி 40 சதவிதத்தில் இருந்து 30 சதவிகிதமாகவும் குறைக்கப்படுகிறது.
வெட்டி பட்டை தீட்டப்பட்ட நவரத்தின கற்களுக்கான இறக்குமதி வரியில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது. பத்திரிகை காகிதத்தின் மீதான இறக்குமதி வரி 5 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 7 வருட வரிச்சலுகை காலம் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பதிலாக 2012-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது.
குடிநீர் வடிகட்டும் உபகரணங்களுக்கான 14 சதவிகித இறக்குமதி வரி அடியோடு ரத்து செய்யப்படுகிறது.
இதன்மூலம் மொத்தம் ரூ.1,500 கோடிக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|