யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பாலு விவகாரம்: பாராளுமன்றத்தில் மத்திய அரசு இன்று அறிக்கை
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008   ( 09:00 IST )
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் மத்திய அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்கிறது.

இந்த அறிக்கை, பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோராவால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

முன்னதாக, இப்பிரச்சனை காரணமாக மாநிலங்களவையில் நேற்று 5-வது நாளாக கடும் அமளி ஏற்பட்டது. 'அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவியும் உறுதி அளித்திருந்தார். அதன்படி, எப்போது விளக்கமளிக்கப்படும்?' என்று பாஜக மூத்தத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பாராளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி பேசுகையில், டி.ஆர்.பாலு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா புதன்கிழமை (இன்று) விளக்க அறிக்கை தாக்கல் செய்வார் என்று அறிவித்தார்.

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனது குடும்ப நிறுவனத்திற்காக மத்திய பெட்ரோலியத் துறையிடமிருந்து எரிவாயுவை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு, பிரதமர் அலுவலகமும் துணைபுரிந்துள்ளதாக எதிர்கட்சிகள் சாடிவருகின்றன.

இதைத் தொடர்ந்து, டி.ஆர்.பாலு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சேது சமுத்திர திட்டம், இதர பிற்படுத்தோருக்கான இட ஒதுக்கீடு ஆகிய விவகாரங்கள் தொடர்பாக தன் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இப்பிரச்சனை திசை திருப்பப்படுவதாகவும், எந்தச் சூழலிலும் தாம் பதவி விலகப்போவதில்லை என்றும் அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்று திட்டவட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும்'
தினமும் ஒரு கற்பழிப்பு : தலைகுனியும் தலைநகரம்
மாநிலங்களவையில் 5 வது நாளாக டி.ஆர். பாலு விவகாரம்
நான் போராளி அல்ல : அருந்ததி ராய்
டி.ஆர். பாலுவுக்கு எதிராக குறி வைக்கிறது பா.ஜனதா
' 7 ஆ‌ண்டுக‌ளி‌ல் ‌வி‌ண்வெ‌ளி‌க்கு ம‌‌‌னித‌னை அனு‌ப்பு‌‌ம்‌ ‌இஸ்ரோ'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace