|
| 'நீதிபதிகள் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும்' |
| புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 17:50 IST ) | |
நீதிபதிகள் தேர்வு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற கமிட்டி வலியுறுத்தியுள்ளது.
நீதிபதிகள் தேர்வு குறித்த அறிக்கையை சட்டம் மற்றும் நீதித் துறைக்கான ஈ.எம்.எஸ். நாச்சியப்பன் தலைமையிலான பாராளுமன்ற கமிட்டியின் அறிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் மேற்கூறிய யோசனையை வலியுறுத்தியுள்ள அக்கமிட்டி, நீதிபதிகளை சக நீதிபதிகள் மட்டுமே தேர்வு செய்யக் கூடாது என்றும் , நீதிபதிகள் நியமனத்தில் தலைமை அதிகாரியின் பங்கு அவசியம் என்றும் கூறியுள்ளது.
மேலும் மேலும் நீதிபதி பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவரின் பெயர், அவரது தகுதி மற்றும் தேர்வு முறைகள் ஆகியவை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இணைய தளங்களில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|