யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
டி.ஆர். பாலுவுக்கு எதிராக குறி வைக்கிறது பா.ஜனதா
புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 15:29 IST )
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு எதிரான பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் விதமாக , ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்கள் பிரச்சனையை மீண்டும் கிளப்ப பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு , தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி , தனது குடும்ப நிறுவனத்திற்காக மத்திய பெட்ரோலியத் துறையிடமிருந்து எரிவாயுவை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்விவகராம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த சில நாட்களாக அமளியை ஏற்படுத்தி வருகிற நிலையில், இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க பா.ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற பா.ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி , ஊழல் கறைபடிந்த அமைச்சர்களை கொண்டதாக மத்திய அரசு திகழ்கிறது என்றார்.

மேலும் டி.ஆர். பாலு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தனது நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும், டி.ஆர். பாலு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அத்வானி கூறினார்.

இத்தகவலை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜனதா தலைவர் வி.கே. மல்ஹோத்ரா தெரிவித்தார்.

கடந்த 2004 ம் ஆண்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதுமே, ஊழல கறைபடிந்த அமைச்சர்களுக்கு எதிரான பிரச்சனையைத்தான் பா.ஜனதா முதலில் கையிலெடுத்தது.தற்போது அதே பிரச்சனையை மீண்டும் கிளப்ப அக்கட்சி முடிவு செய்துள்ளது , மன்மோகன் அரசுக்கு பெரும் தலைவலியாகவே உருவெடுக்கும் என தெரிகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
' 7 ஆ‌ண்டுக‌ளி‌ல் ‌வி‌ண்வெ‌ளி‌க்கு ம‌‌‌னித‌னை அனு‌ப்பு‌‌ம்‌ ‌இஸ்ரோ'
ல‌‌‌‌ஷ்க‌ர் தீவிரவாத இயக்க தலைவன் சு‌ட்டு‌க் கொலை
கர்நாடக தேர்தல் ஏற்பாடு : தேர்தல் கமிஷன் இன்று ஆய்வு
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்சம் வெட்ககேடானது : பிரதமர்
ராமர் பாலம் : நாளை மறுதினம் அவசர வழக்காக விசாரணை
டி.ஆர். பாலு விவகாரம் : மக்களவையில் எதிர்கட்சிகள் அமளி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace