|
| ' 7 ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இஸ்ரோ' |
| ஐதராபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 14:02 IST ) | |
அடுத்த 7 ஆண்டுகளில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ நிறைவேற்றும் என அதன் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :
சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் `சந்திரயான்' திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பொறுப்பு இஸ்ரோவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, சந்திரயான் திட்டப் பணிகளை ஏப்ரல் 29 ல் தொடங்குகிறோம். இந்த திட்டத்துக்கும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயன்படுத்தப்படும்.
அதற்காக, சில மாறுதல்கள் செய்யப்பட்டு `பி.எஸ்.எல்.வி.- எக்ஸ்.எல்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.இந்த ராக்கெட் மூலமாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி வைக்கப்படும்.வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த திட்டம் நிறைவடையும். சந்திரனில் உள்ள கனிம வளம் உள்ளிட்ட விபரங்களை அந்த விண்கலம் படம் பிடித்து அனுப்பும்.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் அடுத்த 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா ராக்கெட்டுகளை 3 முறை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாக சோதனை நடத்தப்படும்.
விண்ணுக்கு அனுப்பப்படும் மனிதனுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்த பிறகுதான் மனிதன் விண்வெளிக்கு அனுப்பப்படுவான். இந்த திட்டத்திற்கு, முதற்கட்டமாக ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|