|
| ராமர் பாலம் : நாளை மறுதினம் அவசர வழக்காக விசாரணை |
| புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 28 ஏப்ரல் 2008 ( 18:44 IST ) | |
ராமர் பாலம் தொடர்பான வழக்கை நாளை மறுதினம் 30ம் தேதியன்று முதல் வழக்காக விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்றும், அதனை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும், மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய ராமர் பாலம் உள்ள பகுதியில், சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த தடை விதித்தது.
இந்தத் தடையை நீக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், " ராமர் பாலம் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்பதே மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் கருத்தாகும். ராமர் பாலம் எனக் கூறப்படும் ஆதாம் பாலம் இயற்கையாக உருவான அமைப்பாகும். எனவே திட்டத்தை நிறைவேற்ற இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் " என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இழுபறியாக இருந்து வரும் நிலையில், இவ்வழக்கை அவசரம் கருதி முன்னுரிமை கொடுத்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் உச்சநீதிமன்றத்திற்குக் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை இன்று பரிசீலித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், எம்.கே.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நாளை மறுதினம் 30ம் தேதி முதல் வழக்காக இது விசாரிக்கப்படும் என அறிவித்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|