யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
டி.ஆர். பாலு விவகாரம் : மக்களவையில் எதிர்கட்சிகள் அமளி
புதுடெ‌ல்‌லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 28 ஏப்ரல் 2008   ( 18:25 IST )
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மீதான குற்றச்சாட்டு குறித்த பிரச்சனையை விவாதிக்க அனுமதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் மக்களவை நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு பாதிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு , தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி , தனது குடும்ப நிறுவனத்திற்காக மத்திய பெட்ரோலியத் துறையிடமிருந்து எரிவாயுவை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க கோரி கடந்தவாரமே மேற்கூறிய இரு கட்சிகளும் மாநிலங்களவையில் பிரச்சனை எழுப்பின.

இந்நிலையில், இன்று மக்களவை கூடியதும், பா.ஜனத, அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் ஒரு சேர எழுந்து, கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு டி.ஆர். பாலு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோஸ் ஹம் எழுப்பினர்.

இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, பாலு விவகாரம் கடந்த வெள்ளிக்கிழமை அவையில் எழுப்பப்பட்டதாகவும், அது குறித்து விவாதிக்க அனுமதி கோருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அனுமதி கோரி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவைகளின் மீது தான் பரிசீலித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், கோபமுற்ற சோம்நாத் சாட்டர்ஜி அவை நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.அதே சமயம் தாம் அவையை ஒத்திவைக்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்ததால் வேறு வழியின்றி எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளுக்கு திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் அமைதியுடன் நடந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு நாடாளுமன்றம் பாராட்டு
டி.ஆர். பாலு பிரச்சனை : அதிமுக, பா.ஜனதா வெளிநடப்பு
'விலைவாசி : பீதியை கிளப்புகிறது மார்க்சிஸ்ட்'
10 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி9 விண்ணில் பாய்ந்தது
10 செய‌ற்கை கோ‌ள்கள்: நாளை செலு‌த்த‌ப்படு‌கிறது
ஹெலிகாப்டரில் கோளாறு: உயிர் தப்பினார் வசுந்தரா ராஜே
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace