யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு நாடாளுமன்றம் பாராட்டு
புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 28 ஏப்ரல் 2008   ( 14:05 IST )
பத்து செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.- சி9 ராக்கெட் இன்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு நாடாளுமன்றத்தில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் இன்று காலை 9.23 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இதில், இந்தியாவின் 2 செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட 10 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.ஏனைய 8 செயற்கைகோள்களை கனடா மற்றும் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தயாரித்துள்ளன.

இது 'இஸ்ரோ' வின் சாதனை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

இந்நிலையில், 'இஸ்ரோ'வின் இந்த சாதனைக்காக மக்களவையில் இன்று அதன் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.

இது தொடர்பாக பாராட்டு தெரிவித்து பேசிய மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, 'இஸ்ரோ' வின் இந்த சாதனை குறித்து தாம் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும், அந்த சாதனையை நிகழ்த்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கு தமது பாராட்டை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சாதனையில் இது ஒரு மைல் கல் என்றும் கூறினார்
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டி.ஆர். பாலு பிரச்சனை : அதிமுக, பா.ஜனதா வெளிநடப்பு
'விலைவாசி : பீதியை கிளப்புகிறது மார்க்சிஸ்ட்'
10 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி9 விண்ணில் பாய்ந்தது
10 செய‌ற்கை கோ‌ள்கள்: நாளை செலு‌த்த‌ப்படு‌கிறது
ஹெலிகாப்டரில் கோளாறு: உயிர் தப்பினார் வசுந்தரா ராஜே
நான் 'இளவரசர்' இல்லை : ராகுல் காந்தி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace