யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
டி.ஆர். பாலு பிரச்சனை : அதிமுக, பா.ஜனதா வெளிநடப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 28 ஏப்ரல் 2008   ( 13:48 IST )
மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மீதான குற்றச்சாட்டு குறித்த பிரச்சனையை எழுப்ப அனுமதிக்காததை கண்டித்து மாநிலங்களவையிலிருந்து அதிமுக, பா.ஜனதா கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு , தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி , தனது குடும்ப நிறுவனத்திற்காக மத்திய பெட்ரோலியத் துறையிடமிருந்து எரிவாயுவை முறைகேடாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் பதிலளிக்க கோரி கடந்தவாரமே மேற்கூறிய இரு கட்சிகளும் மாநிலங்களவையில் பிரச்சனை எழுப்பின.

இந்நிலையில், இன்று மாநிலங்களவை கூடியதும் பா.ஜனதா தலைவர் சுஸ்மா ஸ்வராஜ் மற்றும் அதிமுக உறுப்பினர் வி.மைத்ரேயன் ஆகியோர் இப்பிரச்சனை தொடர்பாக தாங்கள் நோட்டீஸ் கொடுத்திருப்பதாகவும், எனவே அதுபற்றி விவாதிக்க அனுமதிக்குமாறும் அவைத் தலைவர் ஹமித் அன்சாரியை வலியுறுத்தினர்.

ஆனால் கேள்வி நேரத்தை தம்மால் ரத்து செய்ய முடியாது என்றும், கேள்வி நேரம் முடிந்த பின்னர் இப்பிரச்சனையை எழுப்பலாம் என்றும் கூறி அதற்கு ஹமித் அனுமதி மறுத்தார்.

இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா, அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

கேள்வி நேரம் முழுவதையும் அவர்கள் புறக்கணித்தனர்.

கடந்தவாரமும், இதே பிரச்சனை காரணமாக அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'விலைவாசி : பீதியை கிளப்புகிறது மார்க்சிஸ்ட்'
10 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி9 விண்ணில் பாய்ந்தது
10 செய‌ற்கை கோ‌ள்கள்: நாளை செலு‌த்த‌ப்படு‌கிறது
ஹெலிகாப்டரில் கோளாறு: உயிர் தப்பினார் வசுந்தரா ராஜே
நான் 'இளவரசர்' இல்லை : ராகுல் காந்தி
கோர்ட் அவமதிப்பு பிரிவை நீக்க முடியாது : தலைமை நீதிபதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace