யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'விலைவாசி : பீதியை கிளப்புகிறது மார்க்சிஸ்ட்'
கோல்கத்தா(ஏஜென்சி), 28 ஏப்ரல் 2008   ( 11:48 IST )
விலைவாசி உயர்வு பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பீதியை கிளப்புவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கோல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனைக் கூறிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜி , இதுபோன்ற பீதியை கிளப்புவதால் பதுக்கல்காரர்களுக்குத்தான் அது ஆதாயமாக அமையும் என்றார்.

விலைவாசி உயர்வுக்கு எதிராக பேசி வருபவர்கள் ( இடதுசாரிகள் ) , முதலில் தாங்கள் ஆளும் மாநிலங்களில் என்ன நிலை என்பதை பார்க்க வேண்டும்.மேற்குவங்கத்தில் நீண்ட காலமாக ஆட்சியிலிருந்தும் அவர்கள் அரசு ஏன் உணவுதானியங்களை கொள்முதல் செய்வதில்லை.

நாடு முழுவதும் மத்திய அரசு 225 மில்லியன் டன் கோதுமை மற்றும் அரிசியை கொள்முதல் செய்துள்ளது.இதில் 50 சதவீதத்தை மானிய விலையில் ரேஷன் கடைகளுக்கு வழங்கி வருகிறது.

மாநில அரசுகள் தங்களது கொள்முதல் இலக்குகளை பூர்த்தி செய்யாதவரை ரேஷன் கடைகளுக்கு போதுமான அரிசி மற்றும் கோதுமைய மத்திய அரசு விநியோகம் செய்வது சிரமமானது என்று பிரணாப் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
10 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி9 விண்ணில் பாய்ந்தது
10 செய‌ற்கை கோ‌ள்கள்: நாளை செலு‌த்த‌ப்படு‌கிறது
ஹெலிகாப்டரில் கோளாறு: உயிர் தப்பினார் வசுந்தரா ராஜே
நான் 'இளவரசர்' இல்லை : ராகுல் காந்தி
கோர்ட் அவமதிப்பு பிரிவை நீக்க முடியாது : தலைமை நீதிபதி
குடித்துவிட்டு காரோட்டி 3 பேரை கொன்ற எம்.எல்.ஏ. மகன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace