|
| 10 செயற்கை கோள்கள்: நாளை செலுத்தப்படுகிறது |
| ஸ்ரீஹரிகோட்டா (ஏஜென்சி), 27 ஏப்ரல் 2008 ( 14:23 IST ) | |
பத்து செயற்கைக் கோள்களுடன், பிஎஸ்எல்வி-சி 9 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), 10 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி- சி 9 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்துகிறது.
இதில், புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள், மற்றும் இந்தியன் மினி சாட்டிலைட் (ஐஎம்பிஎஸ்1) ஆகிய 2 செயற்கைக் கோள்கள் இந்தியாவை சேர்ந்தவை. மற்ற 8 நானோ செயற்கைக் கோள்கள் வெளிநாடுகளை சேர்ந்தவை.
கார்டோசாட்2ஏ எனப்படும் புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக் கோள் 690 கிலோ எடை கொண்டது. இதில் பான் எனப்படும் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கனடா, ஜெர்மனியில் உள்ள பல்கலைக் கழகங்களால் உருவாக்கப்பட்ட நானோ செயற்கைக் கோள்கள் வர்த்தக அடிப்படையில் செலுத்தப்படுகின்றன.
இந்த செயற்கைக் கோள்கள் அனைத்தும் விண்ணில் செலுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் இந்திய விண்வெளித்துறைக்கு ஒரு புதிய மைல்லாக அமையும் என்று கூறப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|