|
| நான் 'இளவரசர்' இல்லை : ராகுல் காந்தி |
| ராய்பூர்(ஏஜென்சி), சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008 ( 18:29 IST ) | |
பிரதமர் பதவிக்கு தான் தகுதிவாய்ந்த நபர் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளது குறித்து பதிலளித்துள்ள ராகுல் காந்தி, தான் ஒன்றும் இளவரசர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த வார துவக்கத்தில் மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், சாமான்யர்களின் 'யுவராஜ்' ( இளவரசர் ) ஆக ராகுல் காந்தி திகழ்வதாக கூறினார்.
அவர் இவ்வாறு கூறியதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த பா.ஜனதா உறுப்பினர்கள், " யுவராஜ் இருக்கிறார் என்றால் , ராஜ்மாதாவும் ( மகாராணி ) , மகாராஜாவும் இருக்க வேண்டும்.' யுவராஜ் ' என்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல " என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்குள்ளவர்களிடையே பேசுகையில், தாம் ' யுவராஜ் ' இல்லை என்றும் , அவ்வாறு தம்மை அழைக்கும்போது அது தமக்கு அவமானமாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும் மன்மோகன் சிங் தான் தமது தலைவர் என்றும் , பிரதமர் பதவிக்கு அவர்தான் மிகவும் பொருத்தமானவர் என்றும் ராகுல் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|