|
| கோர்ட் அவமதிப்பு பிரிவை நீக்க முடியாது : தலைமை நீதிபதி |
| திருவனந்தபுரம் (ஏஜென்சி), சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008 ( 17:06 IST ) | |
கோர்ட் அவமதிப்பு சட்டப் பிரிவை நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கேரளா சட்டசபை பொன்விழா கொண்டாட்டத்தையொட்டி திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இந்த கருத்தை வெளியிட்ட அவர், கோர்ட் அவமதிப்பு பிரிவு இல்லாமல்போனால், நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் வெறும் காகிதங்களாகிவிடும் என்றும், எந்த ஒரு அதிகாரியும் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியமாட்டார் என்றும் கூறினார்.
கோர்ட் அவமதிப்பு பிரிவு மீது பயம் இல்லை என்றால் எந்த ஒரு அதிகாரியும் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியமாட்டார்.
விமர்சனங்களைக் கண்டு நீதிமன்றங்கள் அச்சம் கொண்டதில்லை.கோர்ட் அவமதிப்பு பிரிவு மக்களின் நலன்களை பாதுகாக்கவே உள்ளன.
நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆரோக்கியமான விமர்சனங்களை செய்யலாம்.ஆனால் நீதிமன்றத்தின் கவுரவத்தையும், அதிகாரத்தையும் சீர்குலைக்கும் விதமாக அந்த விமர்சனம் இருக்கக் கூடாது.
நீதிமன்றம் மீதோ அல்லது எந்த ஒரு தனி நீதிபதிக்கு எதிராகவோ நேரடியான விமர்சனம் கூடாது.உள்நோக்கத்துடன் கூடிய விமர்சனம் இருக்கக்கூடாது; அது விரும்பத்தக்கதுமல்ல என்று பாலகிருஷணன் மேலும் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|