யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
குடித்துவிட்டு காரோட்டி 3 பேரை கொன்ற எம்.எல்.ஏ. மகன்
லக்னோ (ஏஜென்சி), சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008   ( 16:30 IST )
உத்தரபிரதேசத்தில் குடித்துவிட்டு காரோட்டிய எம்.எல்.ஏ வின் மகன் , போதையில் கண்மூடித்தனமாக காரை ஓட்டி சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் மீது காரை ஓட்டி அவர்களை கொன்றார்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஷதாப் பாத்திமா.இவரது 17 வயது மகன் அப்பாஸ்.இவருக்கு கார் ஓட்டும் உரிமம் இல்லாவிட்டாலும் , தனது தாயாரின் காரை எடுத்து ஓட்டுவது வழக்கம்.

மேலும் எம்.எல்.ஏ மகன் என்ற ஆடம்பரத்துடன், தனது வயதையொத்த நண்பர்களை தன்னுடன் குடித்துவிட்டு ஆட்டம்போடுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவிலும் அதேபோன்று அப்பாஸ் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு , இன்று அதிகாலை வரை தனது தாயார் காரை எடுத்துக் கொண்டு வந்துகொண்டிருந்தார்.

லக்னோவில் உள்ள பரிவர்தன் சவுக் என்ற இடத்தில் வந்தபோது, போதையில் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த காரை ஏற்றினார்.இதில் 3 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர்.

அதோடு மட்டுமல்லாது அருகில் உள்ள மின் கம்பத்தின் மீதும் மோதிய அப்பாஸ் கார், பின்னர் அங்கிருந்த பீடா கடை ஒன்றின் மீதும் மோதியது.இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்த தகவலறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீஸார் , அப்பாஸை உடனடியாக கைது செய்து அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதில் அப்பாஸ் குடித்திருப்பது உறுதியானது.மேலும் அப்பாஸ் வந்த காரையும் பறிமுத்ல செய்த போலீஸார், அதில் சோதனை நடத்தினர்.அப்போது காருக்குள் சில பீர் பாட்டில்கள் கிடந்தது.அதனையும் போலீஸார் கைப்பற்றினர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அப்பாஸ் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குடித்துவிட்டு கார் ஓட்டியது மருத்துவ பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச போலீஸ் டிஜிபி விக்ரம் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காஷ்மீரில் லஸ்கர் தீவிரவாதி சரண்
கர்நாடக காங். தலைவர் பயன்படுத்திய ஹெலிகாப்டர் பறிமுதல்
கர்நாடகா : இறுதிக் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கை வெளியீடு
சரப்ஜித் சிங்கை மீண்டும் சந்திக்க சகோதரி விருப்பம்
இரக்கமற்று இருக்காதீர்கள் : பிரதமருக்கு இடதுசாரி கண்டிப்பு
டி.ஆர். பாலு ராஜினாமா கோரி அமளி ; ராஜ்ய சபை ஒத்திவைப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace