யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சரப்ஜித் சிங்கை மீண்டும் சந்திக்க சகோதரி விருப்பம்
அமிர்தசரஸ்(ஏஜென்சி), 26 ஏப்ரல் 2008   ( 12:14 IST )
தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரான சரப்ஜித் சிங்கை மீண்டும் சந்திக்க தாமும், தமது குடும்பத்தினரும் விரும்புவதாக சரப்ஜித் சகோதரி ல்பிர் வுர் தெரிவித்துள்ளார்.

சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனயை ஆயுள் தண்டனையாக குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், பாகிஸ்தான் சென்ற சரப்ஜித் குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவரை சிறையில் சந்தித்துப் பேசினர்.

18 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது குடும்பத்தினரை சந்தித்த சரப்ஜித் சிங் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.அதேபோன்று சரப்ஜித் சிங் குடும்பத்தினரும் பிரிவுத் துயரை தாளாமல் கண்ணீர் வடித்தனர்.

சிறைக்கம்பிகளின் தடுப்புகளுக்கு இடையேதான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

இந்நிலையில், தமது சகோதரரை தாமும், தமது குடும்பத்தினரும் மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், அவரைக் கட்டித் தழுவ விரும்புவதாகவும் , எனவே சிறைக் கம்பிகளுக்கு அப்பால் இந்த சந்திப்பு நிகழவேண்டும் என விரும்புவதாகவும் தல்பீர் கவுர் லாகூரிலிருந்து தொலைபேசி மூலம் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இரக்கமற்று இருக்காதீர்கள் : பிரதமருக்கு இடதுசாரி கண்டிப்பு
டி.ஆர். பாலு ராஜினாமா கோரி அமளி ; ராஜ்ய சபை ஒத்திவைப்பு
டி.ஆர்.பாலு பிரச்சனை : மாநிலங்களவை ஒத்திவைப்பு
விலைவாசி உயர்வை அரசியலாக்காதீர் : பிரதமர்
கலர் டிவி: காங்.குக்கு போட்டியாக பா.ஜ.வும் அறிவிப்பு
விலைவாசி உயர்வு : பிரதமரிடம் கம்யூ. தலைவர்கள் கோரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace