|
| மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா ? இடதுசாரிகள் காட்டம் |
| புதுடெல்லி(ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008 ( 18:57 IST ) | |
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் பற்றாக்குறையால் நாட்டில் உணவுக் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள இடதுசாரி கட்சி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் மன்மோகன் தலைமையிலான அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் காட்டமாக கேள்வி விடுத்தது.
மக்களவையில் இன்று விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்த சிறப்பு விவாதத்தை துவக்கி வைத்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டுள்ள நிலையில் ,மத்தியில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா என வியப்பாக உள்ளது என்றார்.
கடந்த நான்காண்டு காலமாக மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவளித்தது குறித்து வருத்தமாக உள்ளது என்றும் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகளின் பரீட்சார்த்த சோதனை தோல்வியடைந்துவிட்டது வருத்தமளிப்பதாக உள்ளது என்றும் குப்தா கூறினார்.
அரசாங்கம் என்று ஒன்று இருப்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்திய குப்தா, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் பற்றாக்குறையால் நாட்டில் உணவுக் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார்.
சந்தையில் முறைகேடான வர்த்தகம் செய்யும் சக்திகளிடம் மத்திய அரசு வெட்கமமில்லாமல் சரணடைந்துவிட்டது.
பிரதமரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனக் கூறியதாக செய்தி வெளியாகிறது.விலைவாசி உயர்வுக்கு பிரதமர் எவ்வித நிவாரணமும் கூறாததால் நாட்டில் மேலும் விலைவசி உயர்வு குறித்து பீதி ஏற்படுகிறது.
விலைவாசி தீ பற்றி எரியும்போது , அதனை அணைக்க போராடும் அரசு எந்திரம் எங்கே போனது ?
சர்வதேச விலை உயர்வை என்ற போர்வைக்கு பின்னால் அரசு ஒளிந்துகொள்வது சரியானதல்ல என்று அவர் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|