|
| மத்திய அரசை பதவியிலிருந்து அகற்ற இடதுசாரிகளுக்கு அழைப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008 ( 18:57 IST ) | |
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத மத்திய அரசை பதவியிலிருந்து அகற்ற இடதுசாரி கட்சிகள் தங்கள் பக்கம் வர வேண்டும் என பா.ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்த விவாதத்தை துவக்கி வைத்துப் பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது :
பணவீக்கத்தை கட்டுப்படுத்த மந்திரக் கோல எதுவும் தங்களிடம் இல்லைப் என மத்திய அரசு கூறுகிறது.ஆனால் மக்கள் தங்களது கம்பை ( வாக்கை ) பயன்படுத்தினால் அது மிகக் கடுமையாக இருக்கும் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது.
இந்த் பிரச்சனையில் இடதுசாரிகள் அரசு பக்கம் உள்ளார்களா இல்லையா என்பது குறித்த தங்களது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
அவர்கள் எதிர்கட்சிகள் பக்கம் வந்து இந்த அரசை பதவியிலிருந்து அகற்ற வேண்டும்.
காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் விலைவாசி விண்ணைத் தொடும் நிலை காணப்படுகிறது.
2008-09 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஒன்றரை மாதத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|