|
| 'மண்ணின் மைந்தர் வாதம்' ஏற்புடையதல்ல :சிவராஜ் பாட்டீல் |
| புதுடெல்லி(ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008 ( 15:07 IST ) | |
மகாராஷ்ட்ராவில் கிளப்பப்படும் 'மண்ணின் மைந்தர் வாதம்' ஏற்புடையதல்ல என மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று இது தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பிய சிவசேனா எம்.பி.மனோகர் ஜோஷி , " நீங்கள் ( சிவராஜ் பாட்டீல் ) ஒரு மகாராஷ்ட்ரியன் என்பது குறித்து பெருமிதம் கொள்கிறீர்களா ? " எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த சிவராஜ் பாட்டீல், " நான் ஒரு இந்தியனாக இருப்பதில்தான் பெருமிதம் கொள்கிறேன்; அதே சமயம் , மகாராஷ்ட்ராவும் இந்தியாவில் இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன் " என கூறினார்.
" மகாராஷ்ட்ரா இந்தியாவின் ஒரு அங்கம்.மகாராஷ்ட்ராவை இந்தியாவிலிருந்து நான் பிரிக்கப் போவதில்லை.அதே சமயம் மகாராஷ்ட்ராவில் மண்ணின் மைந்தர்கள் அல்லாதோர் விரட்டியடிக்கப்படும் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை" என்று அவர் மேலும் கூறினார்.
ஆனால் பாட்டீல் பதில் திருப்தியளிப்பதாக இல்லை எனக் கூறி சமாஜ்வாடி கட்சி எம்.பி.யான ஜெயா பச்சன், இது தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்ப விரும்பினார்.
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் தனது கட்சி உறுப்பினர்களுடன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|