|
| வதோதரா பஸ் விபத்தை விசாரிக்க மூவர் குழு நியமனம் |
| அகமதாபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008 ( 12:11 IST ) | |
வதோதரா பேருந்து விபத்தை விசாரிப்பதற்கு மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை குஜராத் மாநில அரசு நியமித்த்துள்ளது.
இந்தக் குழுவில் அரசு செயலர்கள் இருவரும், மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரும் இடம்பெறுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வதோதரா மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் உள்பட 42 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நீர்வளத்துறை அமைச்சர் நிதின் படேல் மற்றும் உள்துறை இணையமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
வதோதராவில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெடோலி கிராமத்தில் சென்று கொண்டிருக்கும்போது, நர்மதா கால்வாயில் அரசு பேருந்து விழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நேர்ந்தது தொடர்பான முழு அளவில் விசாரணை மேற்கொண்டு, மூவர் குழு தமது அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|