|
| குஜராத் : நர்மதா கால்வாயில் பஸ் கவிழ்ந்து 42 மாணவர்கள் பலி |
| வடோதரா (ஏஜென்சி), 16 ஏப்ரல் 2008 ( 09:54 IST ) | |
குஜராத் மாநிலத்தின் வடோதரா அருகே நர்மதா கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 42 பள்ளி மாணவர்கள் உட்பட 44 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வதோதராவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பொடேலி கிராமத்தில் இன்று அதிகாலை 6 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இதுவரை 44 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும், இதில் 42 பேர் பள்ளிச் சிறுவர்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜய் நேஹ்ரா தெரிவித்தார்.
மேலும், உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
கல்விச் சுற்றுலாவுக்காக 5 முதல் 11-ம் வகுப்பு வரையிலான 60 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தர்போட் கிராமத்தில் இருந்து பொடேலிக்கு குஜராத் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தப் பேருந்து, பொடேலியில் பாலத்தைக் கடந்தபோது, நிலை தடுமாறி நர்மதா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|