யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி : காங்கிரஸ் விளக்கம்
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008   ( 09:30 IST )
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்படுவதற்கு அர்ஜூன் சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்நிலையில், இது தொடர்பான யோசனையை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் நேற்று ஓர் அறிக்கையை செய்தியாளர்களிடம் வாசித்தார்.

அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், பிரதமர் மன்மோகன்சிங்கும், அவரது அமைச்சர் சகாக்களும் திறமையாக செயல்பட்டு பல சாதனைகளை செய்து வருகிறார்கள் என்றும், நலிந்த பிரிவினரின் நலனுக்காக பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வரும் நிலையில், பிரதமர் பதவி தற்போது காலியாக இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று `முகஸ்துதி' பாடப்படுவதாகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பொதுச்செயலாளர் ராகுல் காந்தியும் முகஸ்துதியை கேட்காமல், எப்போதும் விலகியே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் யூகங்களை பரப்பி விடுவது சரியல்ல என்றும், எல்லாவிதமான யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விரும்புகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விலைவாசி உயர்வு : இரு அவைகளிலும் இன்று விவாதம்
கிரீமி லேயர் : சோனியாவிடம் திமுக மனு
தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
'ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது பயனற்றது'
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...