யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
விலைவாசி உயர்வு : இரு அவைகளிலும் இன்று விவாதம்
புதுடெல்லி (ஏஜென்சி), 16 ஏப்ரல் 2008   ( 08:33 IST )
விலைவாசி உயர்வு பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று விவாதம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் இன்று விவாதிப்பது குறித்து ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையிலும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மக்களவையில் விவாவத்தின்போது, மத்திய வேளாண்துறை அமைச்சர் ஷரத் பவார் பதிலளித்துப் பேசுவார். தேவைப்படின், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் அவருடன் சேர்ந்து விளக்கமளிப்பார்.

முன்னதாக, இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரின் துவக்க நாளான நேற்று, விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனையை ழுப்பி பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளும், இடதுசாரிகளும் அமளியில் ஈடுபட்டதால், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மேலும், பணவீக்கத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தாததைக் கண்டித்து, இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் மற்றும் மூன்றாவது அணி என்று அழைக்கப்படும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி எம்.பி.க்கள் இணைந்து பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குஜராத் : நர்மதா நதியில் பஸ் கவிழ்ந்து 15 மாணவர்கள் பலி
பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி : காங்கிரஸ் விளக்கம்
கிரீமி லேயர் : சோனியாவிடம் திமுக மனு
தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
'ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது பயனற்றது'
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...