|
| கிரீமி லேயர் : சோனியாவிடம் திமுக மனு |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஏப்ரல் 2008 ( 18:51 IST ) | |
இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கான வருமான வரம்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
சோனியா காந்தியிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :
கிரீமி லேயர் பிரிவினரை அடையாளம் காண இப்போதுள்ள பொருளாதார அளவு கோலை (வருடத்துக்கு ரூ. 2.5 லட்சம் வருமானம்) நடைமுறைப்படுத்தினால் அது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாதிப்பாக அமையும்.
இதனால் இந்த வருமான வரம்பை உயர்த்த வேண்டும்.
விரைவில் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த பரிந்துரைகள் அமலானால் மத்திய அரசுப் பணியில் குரூப்-டி ஊழியரின் வாரிசுகளுக்குக் கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்காது.
எனவே இது தொடர்பாக விரைவில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|