யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஏப்ரல் 2008   ( 15:23 IST )
விலைவாசி உயர்வு குறித்த பிரச்னையை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் , பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை துவங்கிய நிலையில் , பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனை எதிரொலித்தது.

மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும் , பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி , இடதுசாரி மற்றும் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து நின்று விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனையை எழுப்பினர்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பமாக இருந்தது.இந்த அமளி காரணமாக அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் , அவை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது.சமாஜ் வாடி கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.ஆளும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் நடப்பதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி.

இதனிடையே மாநிலங்களவை இன்று காலை கூடியதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவுடனேயே, விலைவாசி உயர்வு பிரச்சனையை எதிர்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஹமித் அன்சாரி.

பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் அதே நிலைமை நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக மத்திய அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஏழு மத்திய அமைச்சர்களையும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மன்மோகன் சிங் அறிமுகம் செய்து வைத்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற கூட்டத் தொடர் துவங்கியது
பார்லி. நாளை கூடுகிறது : அனல் கிளப்ப எதிர்கட்சிகள் திட்டம்
ராகுல் காந்தி பிரதமராக அர்ஜூன் சிங் ஆதரவு
கோல்கத்தா - டாக்கா ரயில் சேவை தொடங்கியது
27% இடஒதுக்கீடு தீர்ப்பு முழுமையாக அமல்: அர்ஜூன் சிங்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...