|
| பாராளுமன்ற கூட்டத் தொடர் துவங்கியது |
| புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஏப்ரல் 2008 ( 11:23 IST ) | |
பரபரப்பான அரசியல் சூழிநிலைக்கிடையே இரண்டாவது கட்ட பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், இன்று தொடங்கிய இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில் இப்பிரச்சனை அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுக்கும் என தெரிகிறது.
பணவீக்கம் குறித்து உடனடியாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்போவதாக பிரதான எதிர்கட்சியான பா.ஜனதா அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளதால் , இப்பிரச்சனையை பாராளுமன்றத்தில் மிகப் பெரிய அளவில் கிளப்பி அரசுக்கு எதிரான எண்ணததை மக்களிடத்தில் ஏற்படுத்திவிட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா துணை தலைவர் வி.கே. மல்ஹோத்ரா , விலலைவாசி உயர்வு குறித்து அவையில் சிறப்பு விவாதம் நடத்த அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவையை நடத்தவிட மாட்டோம் என எச்சரித்தார்.
அதேபோன்று சமாஜ்வாடி கட்சியும் கூட்டத் தொடரின் முதல் நாளான நாளையே, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரித்துள்ளது குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பணவீக்கம் கடந்த 41 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதால் , தமது கட்சி இப்பிரச்சனையை மிக தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கும் இடது சாரிகளும், இப்பிரச்சனையில் அரசுக்கு எதிரான நிலையில் இருப்பதால் , நடப்பு கூட்டத் தொடர் மிகுந்த பரபரப்பாகவே இருக்கும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|